Switch

Edition

/
/
/
கிரிக்கெட் இரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய இரு இலங்கை வீரர்கள்!
கிரிக்கெட் இரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய இரு இலங்கை வீரர்கள்!
கிரிக்கெட் இரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய இரு இலங்கை வீரர்கள்!
Print Friendly, PDF & Email

பங்களாதேஷ்-இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் இலங்கை அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் சதங்களை பெற்றுள்ளனர்.

ஒரே டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் இரண்டு இலங்கை வீரர்கள் சதம் அடிப்பதும் இதுவே முதல் முறையாகும்.

இந்த போட்டியினூடாக இலங்கை அணி நேற்று(24) டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை புதுப்பித்துள்ளது.

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கும் போது, ​​தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக விளையாடி இலங்கை அணி, 5 விக்கெட் இழப்புக்கு 119 ஓட்டங்களை எடுத்திருந்தது.

அதன் பின்னர், அணித்தலைவர் தனஞ்சய டி சில்வாவுடன் இணைந்த கமிந்து மெண்டிஸ், 7ஆவது விக்கெட்டுக்காக 173 ஓட்டங்களை பெற்று வெற்றிகரமான இணைப்பாட்டத்தை உருவாக்கி இலங்கை இன்னிங்ஸை வலுப்படுத்தினார்.

டெஸ்ட் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டதற்கு முழு திறமையை வௌிப்படுத்தி கமிந்து மெண்டிஸ், டெஸ்ட் போட்டிகளில் தமது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்து 164 ஓட்டங்களையும் குவித்தார்.

அத்துடன் கமிந்து மெண்டிஸ் குறைந்த இன்னிங்ஸ்களில் இரண்டு டெஸ்ட் சதங்களை அடித்த முதல் இலங்கை வீரருடன் முதல் 7 டெஸ்ட் போட்டிகளுக்குள் இரண்டு சதங்களை பெற்ற முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா டெஸ்ட் போட்டியில் தனது 12வது சதத்தை பதிவு செய்து 108 ஓட்டங்களை பெற்று, இத்தகைய சாதனையை நிகழ்த்திய முதல் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இலங்கை அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த 6வது துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையில் அவர் இணைந்தார்.

மேலும் 10 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை வீரர் ஒருவர் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்திருப்பது சிறப்பம்சமாகும்.

{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

More news like this

cinema
'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'
wife movei
மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட 'வைஃப்' பட...
royal
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள்...
cricket
முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள...
theena
தீனா படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது அஜித் ...
simbran
நடிகை சிம்ரனின் மகன்களை பார்த்துள்ளீர்களா.. எப்படி...
serial
சதி திட்டம் போடும் ரோகிணி, முத்து சிக்குவாரா.. சிற...
losliya
கைய வச்சு மறைச்சு அப்படி ஏன் இந்த ஆடை போட்றீங்க.. ...
kanguva
கங்குவாவை தொடர்ந்து சிறுத்தை சிவாவுக்கு அடித்த ஜாக...
aadu jeevitham
ஆடு ஜீவிதம் படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி...
cinema
'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'
wife movei
மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட 'வைஃப்' பட...
royal
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள்...
cricket
முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள...
theena
தீனா படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது அஜித் ...
simbran
நடிகை சிம்ரனின் மகன்களை பார்த்துள்ளீர்களா.. எப்படி...

All rights reserved © Relaks Limited

Ads :

Install Relaks Media app now from App Store or Play Store to listen to your favorite songs or podcasts or international radio in different languages. In the same app, you can listen to Relaks Radio Uk, Relaks Radio Lanka, Relaks Radio Bangla and Relaks Radio Music and also read international news. To watch regular programs of Relaks Radio follow on Facebook Relaks Radio Bangla or subscribe on YouTube Relaks Media. For latest news follow on Facebook Relaks News 24 or subscribe on YouTube Relaks News 24. Mail us to give your opinion about us info.bd@relaks.net

Log in

Not registered? Join us FREE